You are here
நூல் அறிமுகம் 

கீழத்தஞ்சை: விவசாயிகள் இயக்கமும், தலித் மக்கள் உரிமைகளும்

ஜி. ராமகிருஷ்ணன்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாபிலச் செயற்குழு சார்பாக கீழத்தஞ்சைப் பகுதியின் பொறுப்பாளராக இருந்த ஒரு பத்தாண்டு காலத்தில் கட்சிப் பதிக்காக கிராமங்களுக்குச் செல்கிற போதும், மூத்த தோழர்களோடு பேசுகிற போதும், கடந்த கால இயக்கம் பற்றி தோழர்கள் கூறிய கருத்துக்கள், விபரங்கள் ஒருபுறம் பிரமிப்பாகவும் மறுபுறம் பெருமையாகவும் இருந்தது.

கீழத்தஞ்சையில் விரல்விட்டு எண்ணக்கூடிய சிலர் கையில் பிலங்கள் குவிந்திருந்தன.  அதன் காரணமாகவே தலித் மக்கள் மீது குரூரமான தீண்டாமைக் கொடுமையிம் இருந்தது. பண்ணையடிமைகளாக இருந்த பெரும்பான்மையான தலித் மக்களும் சாதி இந்து விவசாயிகளும் குத்தகை விவசாயிகளும் பண்ணையார்களின் கடுமையான சுரண்டலுக்கும், கொடுமைக்கும் ஆளானார்கள். கீழத்தஞ்சை தலித் மக்கள் தமிழகத்தில் வேறு எந்தப்பகுதியிலும் கண்டிராத தீண்டாமைக் கொடுமைகளை அனுபவித்தனர்.

 கடந்த நூற்றாண்டின் துவக்கத்தில் இருந்து தீண்டாமைக் கொடுமையை எதிர்த்தும், பண்ணையார்களின் ஒடுக்குமுறைகளை எதிர்த்தும் விவசாயிகளும், பண்ணையடிமைகளான தலித் மக்களும் போராடினார்கள். ஆங்கில காலனி ஆதிக்க அரசு பண்ணையார்களுக்கு அரணாக இருந்தது. சுதந்திரத்திற்கு பிறகு (1947) ஆட்சிப் பொறுப்பேற்ற காங்கிரஸ் அரசும் பண்ணையார்களுக்கு ஆதரவாகவே இருந்தது. அடுத்தடுத்து வந்த திராவிடக் கட்சிகளின் ஆட்சிகளிலும் இதே பிலைமைதான்.

விவசாயிகளும், குத்தகை விவசாயிகளும், தலித் மக்களும், பண்ணையார்களை எதிர்த்துப் போராடுகிற போது பண்ணையார்களுக்கு அரணாக இருந்த காலனியாதிக்க அரசை எதிர்த்தும், சுதந்திரத்திற்குப் பிறகு காங்கிரஸ் அரசை எதிர்த்தும் அடுத்தடுத்து வந்த திராவிடக் கட்சிகளின் அரசுகளை எதிர்த்தும் போராட வேண்டியிருந்தது.  இத்தகைய சூழலில் யாரோடு சேர்ந்து யாரை எதிர்ப்பது என்பது முக்கியத்துவம் பெறுகிறது. சுருங்கச் சொன்னால் வர்க்கங்களைப் பற்றிய பகுப்பாய்வு தேவைப்படுகிறது. வர்க்கங்களின் பகுப்பாய்வு பற்றி மாவோ  கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார் :

“”””புரட்சிக்கு முதல் முக்கியத்துவம் வாய்ந்த கேள்வியே யார் நமது எதிரிகள்? யார் நமது நண்பர்கள்? என்பதாகும்””. நமது உண்மையான எதிரிகளைத் தாக்குவதற்கு நமது உண்மையான நண்பர்களுடன் ஒன்றிணைவதற்கு நாம் அவசியம் கவனம் செலுத்துவதன் மூலம் நமது புரட்சியில் வெற்றியைத் திட்டவட்டமாக சாதிக்க முடியிம்.

அன்றைய அரசின் அணுகுமுறை, வர்க்கங்களின் பிலை, தீண்டாமைக் கொடுமைகள் உள்ளிட்ட சமூகப் பிரச்சனைகள் போன்ற அம்சங்களை  கம்யூனிஸ்ட் கட்சியின் அன்றைய தலைமை பகுப்பாய்வு செய்து எதிரிகள் யார்? நண்பர்கள் யார்? என்பதை தீர்மானித்தது. இத்தகைய பகுப்பாய்வை தஞ்சை மாவட்டத்தில் கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு தலைமை தாங்கியவர்களில் ஒருவரான பி.சீனிவாச ராவ் (பிஎஸ்ஆர்) 1947ல் “”””தஞ்சை ஜில்லாவில் நடப்பது என்ன?”” என்ற பிரசுரத்தில் துல்லியமாக விளக்கியிள்ளார்.

“”””லட்சக்கணக்கான தரித்திர நாராயண உழவர்கள் ஒருபுறம்- பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நஞ்சை வயல்களை சொந்தமாகக் கொண்டு, இன்பத்தில் முங்கி மூழ்கும் ஒருசில பெரு மிராசுதார்கள் மற்றொருபுறமும், இந்த ஜில்லாவில் இருக்கிறார்கள்””.

“”””இந்த காட்சி ஒருபுறம் இருக்கட்டும், மற்றொரு காட்சியைப் பாருங்கள்.  இந்த மிராசுதாரர்களின் பணக்குவியலைப் பெருக்குவதற்காக சேற்றில் இறங்கி இரவென்றும், பகலென்றும் பாராமல் உழைத்து ஓட்டாண்டிகளான பண்ணையாள்களையிம், வாரதாரர்களையிம், குத்தகைதாரர்களையிம் பாருங்கள். பண்ணையாட்களெல்லாம் பெரும்பாலும் ஆதி திராவிட மக்களே.””

“”””பண்ணையாட்கள் சமூகத்துறையிலும் பொருளாதாரத்துறையிலும் நசுக்கப்பட்டுக் கிடந்த இந்த மக்களுக்குக் கிசான் சபை உயிர் காக்கும் தோழனாக ஆகிவிட்டது.””

“தங்கள் உடல், பொருள், ஆவி மூன்றையிம் மிராசுதாரர்களுக்கே தத்தம் செய்துவிட்ட பெரும் பெரும் காங்கிரஸ் தலைவர்களும் கிசான் சபைக்கு விரோதமாக இடைவிடாமல் செயல்பட்டு வந்தார்கள்”.

மேற்கண்ட வரிகளை வாசித்தால் 1940களில் தஞ்சை மாவட்டத்தில் இருந்த சமூக, பொருளாதார, அரசியல் பிலைமையைப் புரிந்து கொள்ள முடியும்.

காலனி ஆதிக்க அரசுக்கும் பண்ணையார்களுக்கும் எதிராக, பண்ணையாட்கள், நடுத்தர, ஏழை விவசாயிகள், குத்தகை விவசாயிகள் ஆகியோரை ஒன்றுதிரட்டிப் போராட கம்யூனிஸ்ட் கட்சி வியூகம் வகுத்தது.

கம்யூனிஸ்டுகள் வர்க்கங்களை மட்டுமே பார்ப்பார்கள். சாதிகளைப் பார்க்க மாட்டார்கள் என குறை கூறுவோர் உண்டு. இன்றல்ல, 1940களிலேயே கம்யூனிஸ்ட் கட்சி பிலப்பிரபுத்துவ சுரண்டல், தீண்டாமைக் கொடுமை ஆகிய இரண்டையிம் எதிர்த்து போராட வேண்டுமென்பதைத் தீர்மானித்தது. ‘தஞ்சை யுல்லாவில் நடப்பது என்ன?’ என்ற புத்தகத்தில் கீழ்க்கண்டவாறு இப்பிரச்சனையை

பி.எஸ்.ஆர். விளக்கியிருக்கிறார்.

பண்ணையாட்கள் “சமூகத் துறையிலும், பொருளாதாரத் துறையிலும் நசுக்கப்பட்டுக் கிடந்தார்கள். பண்ணையாட்களும், அவர்களுடைய மனைவி, மக்களும், பிலத்துடன் பிணைக்கப்பட்டு பிறப்பிலேயே அடிமைகளாக இருக்க வேண்டியிள்ளது”.

சாதிக் கொடுமையைப் பற்றி குறிப்பிடுகிறபோது, “ஜாதி இந்துக்களை தூரத்தில் இருந்து பார்த்து விட்டாலும் உடனே தரையில் விழுந்து கும்பிட வேண்டும். இதுதான் அவர்களுக்கு மரியாதை செய்யிம் விதம். தம் எஜமானர்களின் கட்டளைப்படி கீழ்த்தர வேலைகள் அத்தனையிம் இந்த ஆதி திராவிட மக்களே செய்ய வேண்டும்.நசுக்கப்பட்டு, சுரண்டப்பட்டு, தத்தளித்துக் கொண்டிருந்த இந்த மனித குலத்துக்கு சுடர் விட்டுப் பிரகாசிக்கும் ஜோதியாக விளங்கியது கிசான் சபை”.

தலித் பண்ணையாட்கள் பிலப்பிரபுத்துவ சுரண்டலுக்கும், பிலப்பிரபுத்துவ சாதிக் கொடுமைக்கும் ஆளானதை பிஎஸ்ஆர் துல்லியமாக  விளக்கியிருக்கிறார்.  இத்தகைய கொடுமையை எதிர்ப்பதற்கு தலித் பண்ணையாட்களை மட்டும் திரட்டினால் போதாது. சாதி இந்து நடுத்தர, ஏழை விவசாயிகளையிம், குத்தகை விவசாயிகளையிம் திரட்டிட, ஒற்றுமையை உருவாக்கிட, கம்யூனிஸ்ட் கட்சி திட்டத்தை உருவாக்கி நடைமுறைப்படுத்தியது.  தலித் மக்களையிம் சாதி இந்து விவசாயிகளையிம் ஒன்று படுத்த கம்யூனிஸ்ட் கட்சியிம், விவசாய சங்கமும் முயற்சி எடுத்தது மட்டுமல்ல, வெற்றியிம் பெற்றது.

“மிராசுதாரர்கள் தங்களுடைய எஜமானாகிய ஆங்கிலேயர்களைப் போலவே ஜாதி இந்து – ஹரிஜன வித்தியாசங்களை ஓர் முகமூடியாகக் கொண்டு, இந்த இரு சமூக ஏழை விவசாயிகளையிம் பிரித்தாளும் சூழ்ச்சியில் இறங்கினார்கள். ஆதலால் அவசர அவசரமாக திட்டங்கள் வகுத்தார்கள். ஜாதி இந்து விவசாயிகளிடமிருந்த ஜாதி துவேஷத்தைப் பயன்படுத்திக் கொண்டு கிசான் சபையை ஒஷீத்துக் கட்ட முனைந்தார்கள். இப்பொழுதுதான் கிசான் சபை இதற்கு முன் கண்டிராத மகத்தான எழுச்சியை மக்களிடையே உண்டாக்கி விட்டது. அதன் விளைவாக மிராசுதாரர்கள் ஏவிய குண்டர்களின் தாக்குல்களும், மிராசுதாரர்களின் கைவரிசைகளும், வஜ்ராயிதம் போன்ற கிசான் சபையின் முன்னே பொடிப்பொடியாகப் போய்விட்டன”.

“ஆரம்பத்தில் ஜாதி இந்துக்களான வாரதாரர்களும், குத்தகைதாரர்களும், சிறு விவசாயிகளும்,கிசான் சபையை சரிவரப் புரிந்து கொள்ளாமல் சந்தேகப்பட்டுக் கொண்டிருந்தனர்.கிசான் சபையை ஆதி திராவிடர்களின் ஜாதி சங்கம் என்று பினைத்தார்கள், ஜாதி துவேஷம் அதிகமாய் இருந்த படியால் கிசான் சபையின் கொள்கைகளையிம், திட்டத்தையிம் பற்றி அறிந்து கொள்ள அவர்களுக்கு கால தாமதமாயிற்று. இந்த இரு சமூக ஏழை விவசாயிகளும் ஒன்று கூடி விட்ட அன்றே….”

என தலித் பண்ணையாட்களையிம், சாதி இந்து விவசாயிகளையிம் ஒற்றுமைப்படுத்துவதில் கம்யூனிஸ்ட் கட்சியிம், விவசாய சங்கமும் எடுத்த முயற்சிகளையிம் அதில் வெற்றி பெற்றதையிம் மேற்கண்டவாறு தோழர் பிஎஸ்ஆர் விளக்கியிள்ளார்.

தலித் மக்கள் சாதி இந்து விவசாயிகள் ஆகிய இரண்டு பகுதியினரும் எதிர்கொண்ட பிரச்சனைகளை கோரிக்கைகளாக்கி ஒன்றுபட்ட போராட்டத்தை உருவாக்கியதே ஒற்றுமைக்கு வஷீ வகுத்தது. பண்ணையார்களால் விவசாயிகளும் பாதிக்கப்பட்டார்கள்: பண்ணையடிமைகளும் பாதிக்கப்பட்டார்கள். எனவே, பண்ணையார்களை எதிர்ப்பதில் ஒற்றுமை உருவானது. பண்ணையார்களுக்கு ஆதரவாக காலனி அரசும் சுதந்திரத்திற்கு பிறகு உருவான அரசுகளும் இருந்ததால் தலித் மக்களையிம் சாதி இந்து விவசாயிகளையிம் ஒற்றுமைப்படுத்த முடிந்தது.

ஒற்றுமை கிராம அளவிலிருந்து மாவட்டத் தலைமை வரையில் உருவானது. உதாரணமாக குத்தாலம் ஒன்றியம் காஞ்சிவாய் கிராமத்தில் 1940களில் அந்த கிராமத்தின் பிலங்களில் பெரும்பகுதி மூன்று பண்ணையார்களுக்குச்  சொந்தம். அவர்கள் வைத்ததுதான் சட்டம். தலித் மக்கள் துண்டைத் தோளில் போட முடியாது; வேட்டியை சுருட்டித்தான் கட்ட வேண்டும்; செருப்பு அதிந்து போக முடியாது; டீக்கடையில் ஜன்னல் வஷீயாகத்தான் டீ கொடுப்பார்கள்; தண்ணீர் கேட்டால் கையை பிடித்துக் கொள்ளச் சொல்லி ஊற்றுவார்கள்; டம்ளரில் கொடுக்கமாட்டார்கள். இத்தகைய தீண்டாமைக் கொடுமைகளை எதிர்த்து தலித் மக்களும் சாதி இந்து விவசாயிகளும் இணைந்து போராடி தீண்டாமைக் கொடுமை பெருமளவு ஒஷீக்கப்பட்டுவிட்டது.

இத்தகைய போராட்டத்திற்கு தலைமை தாங்கிய சம்பா ராமசாமி, நல்லகண்ணு ஆகிய இருவரும் 1948 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு காவல்துறையினரால் துப்பாக்கி பேனட்டால் குத்தப்பட்டு காயத்துடன் திருச்சி  சிறையில் அடைக்கப்பட்டார்கள். அவர்கள் சிறையிலிருந்த போது புண்தில் சீழ் பிடித்து புழு வைத்துவிட்டது. சிறைக்காவலர்கள்தான் புண்ணை ஆற்றியிருக்கிறார்கள். இருவரும் விடுதலையாகி ஊருக்கு வருகிற போது பிரமாண்டமான வரவேற்பு கிடைத்தது. சம்பா ராமசாமி இரண்டு முறை ஊராட்சி மன்றத் தலைவராகவும் நல்லகண்ணு ஒரு முறை ஊராட்சிமன்றத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அந்த இரண்டு தோழர்களுக்கும் பினைவு தினம் ஒரே நாளில் கொண்டாடப்படுகிறது. இதில் குறிப்பிடத்தக்கது சம்பா ராமசாமி ஒரு தலித். நல்லகண்ணு பிற்படுத்தப்பட்ட சாதியைச் சார்ந்தவர். அக்காலத்தில் இதுதான் கீழத்தஞ்சை கம்யூனிஸ்ட் இயக்கத்தின் பலமாக இருந்தது. காஞ்சிவாய் மட்டுமல்ல கீழத்தஞ்சையின் ஒவ்வொரு கிராமத்திற்குப் பின்னால் இத்தகைய னிர வரலாறு உள்ளது. அவையெல்லாம் தொகுக்கப்படாமல் போனது மிகப்பெரிய சோகம்.

கிராம அளவில் மட்டுமல்ல, மாவட்ட அளவிலும் இரண்டு பகுதிகளைச் சார்ந்த தோழர்கள் கட்சித் தலைமையில் இருந்தார்கள். அமிர்தலிங்கம், மணலிகந்தசாமி, காத்தமுத்து, கே.ஆர்.ஞானசம்பந்தம், யு.பாரதி மோகன், கோ.னிரய்யன், ஏ.எம்.கோபு, வே.மீனாட்சி சுந்தரம் போன்ற சாதி இந்து பகுதியைச் சார்ந்த தோழர்களும் பி.எஸ்.தனுஷ்

கோடி, எம்.செல்லமுத்து, ஏ.கே.சுப்பையா, எம்.பி.கண்ணுசாமி, வடிவேலு, வேதய்யன் போன்ற தலித் பகுதியைச் சார்ந்த தோழர்களும் தலைமையில் இருந்தார்கள். சில தலைவர்களின் பெயர்கள் மட்டும்தான் இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது. இதேபோன்று ஏராளம் உள்ளது.

சுதந்திரத்திற்கு முன்பும், சுதந்திரத்திற்குப் பிறகும் பொதுவாக முதலாளித்துவப் பத்திரிகைகள் கம்யூனிஸ்ட் கட்சி, விவசாயிகள் இயக்கத்தின் கொள்கைகளை, நடவடிக்கைகளை சரியாக பிரசுரிப்பதில்லை.  ஆனால், கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு எதிரான செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தன.  இதுபற்றியிம் பிஎஸ்ஆர் மேற்கண்ட பிரசுரத்தில் கீழ்க்கண்டவாறு விளக்குகிறார்:

“விவசாயிகளை அடக்க வேண்டும், விவசாய சங்கங்களை நசுக்க வேண்டுமென்று துடித்துக் கொண்டிருக்கிற மிராசுதார்கள் என்ன கடிதமெழுதினாலும் சரி,     உடனுக்குடன்   அவற்றை,

நாலு பத்தி தலைப்புக் கொடுத்து கொட்டைஎழுத்துக்களில் பிரசுரித்து விடுகின்றன தேசியப் பத்திரிக்கைகள். அதே சமயத்தில் மிராசுதாரர்களின் பொய்ப் பிரச்சாரத்தை மறுத்து, கிஸான் சபைத் தலைவர்களோ, கம்யூனிஸ்ட் கட்சித்தலைவர்களோ அறிக்கை விடுத்தால், அவைகளை வெளியிலகுக்கு தெரியாதபடி இருட்டடிப்பு செய்து விடுகின்றன அதே பத்திரிகைகள்.”

பண்ணையார்களுக்கு (ஆளும் வர்க்கம்) ஆதரவாக காவல்துறை, காலனி ஆட்சி பிர்வாகம், முதலாளித்துவ ஊடகங்கள் ஆகியவை இருந்தன. இவைகளையெல்லாம் எதிர்த்து தலித் மக்கள் மற்றும் விவசாயிகளின் ஒன்றுபட்ட இயக்கத்தை சுதந்திரப் போராட்ட காலத்திலும்,  சுதந்திரத்திற்குப் பிறகும் கம்யூனிஸ்ட் கட்சியிம், விவசாயிகள் சங்கமும் வலுவாக நடத்தின. சுதந்திரம் கிடைத்தால் பிலைமை மாறும் எனப் பலர் பினைத்தார்கள். அன்னியர் ஆட்சி அகற்றப்பட்டது. ஆனால், ஆட்சிப் பொறுப்பேற்ற காங்கிரஸ் தலைமையிலான அரசு பண்ணையார்களுக்கு ஆதரவாகவே இருந்தது.

காலனியாட்சி பிர்வாகத்திற்கு ஆதரவாக இருந்த பண்ணையார்கள், சுதந்திரத்திற்குப் பிறகு காங்கிரஸ் கட்சியை ஆதரித்தார்கள். 1967-க்குப் பிறகு பண்ணையார்கள் அடுத்தடுத்துப் பொறுப்பேற்ற திராவிடக் கட்சிகளுக்கு ஆதரவாக பின்றார்கள்.

1948-ம் ஆண்டு மத்திய அரசு கம்யூனிஸ்ட் கட்சியை தடை செய்தது. மாபிலம் முழுவதும் அன்றைய அரசும், காவல்துறையிம் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மீதும், கட்சி ஊஷீயர்கள் மீதும் கடுமையான தாக்குதலைத் தொடுத்தது. இக்காலத்தில்தான் சேலம் சிறையில் துப்பாக்கிச்சூடு நடத்தி, 22 கம்யூனிஸ்ட்கள் கொல்லப்பட்டனர். மாபிலம் முழுவதும் பல முன்னதி ஊஷீயர்கள் கொல்லப்பட்டார்கள்.

1948-50 அடக்குமுறைக் காலத்தில் தஞ்சை மாவட்டத்தில் களப்பால் குப்பு, நாணலூர் நடேசன், வாட்டாக்குடி இரதியன், ஜாம்பவான் ஓடை சிவராமன், ஆம்பலாபட்டு ஆறுமுகம், செந்தாமரைக்கண் கிராமத்தைச் சேர்ந்த மஞ்சான், நல்லூர் ஆற்றங்கரைத் தெரு கே.வைரவன், கழுகத்தூர் காத்தான், கோட்டூர் ராஜூ ஆகிய 9 முன்னதித் தோழர்கள் காவல் துறையினரால், பிலச்சுவான்தார்களின் குண்டர்களால் கொல்லப்பட்டனர்.

இந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்கம் உருவாகிற போதே காலனி ஆதிக்க அரசு கம்யூனிஸ்ட்டுகள் மீது மீரட் சதி வழக்கு, கான்பூர் சதி வழக்கு என சதி வழக்குகளைப் போட்டு ஒடுக்க முயற்சித்தது. வழக்கு விசாரணை நடந்த நீதிமன்றங்களையே கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கைகளைப் பிரகடனப்படுத்திடும் வாய்ப்பாகத் தலைவர்கள் பயன்படுத்தினார்கள்.

தஞ்சை மாவட்டத்திலும் பல சதி வழக்குகள் போடப்பட்டன. விபரங்கள் நூலில் உள்ளன.

தஞ்சை மாவட்டம் மட்டுமல்ல, மாபிலம் முழுவதும், ஏன் நாடு முழுவதும் கம்யூனிஸ்ட் கட்சி மீது அரசு தொடுத்த அடக்குமுறையினால் பேரிழப்பை கட்சி சந்திக்க நேர்ந்தது. இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் கம்யூனிஸ்ட் இயக்கம் அடக்குமுறையை சந்தித்ததைப் போல்  வேறு எந்த இயக்கமும் சந்தித்திருக்க முடியாது. ஆனாலும், மக்கள் நலனுக்கான போராட்டத்தை கம்யூனிஸ்ட் இயக்கம் தொய்வின்றி முன்னெடுத்துச் சென்றது.

சுதந்திரப் போராட்ட காலத்தில்  கம்யூனிஸ்ட் கட்சியையிம் விவசாயிகள் இயக்கத்தையிம் அஷீக்க முயன்று காலனி ஆட்சி பிர்வாகம் தோற்றுப்போனது.

சுதந்திரத்திற்குப் பிறகு பொறுப்பேற்ற காங்கிரஸ் அரசு கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டதைப் பயன்படுத்தி கம்யூனிஸ்ட் இயக்கத்தையிம் விவசாயிகள் இயக்கத்தையிம் ஒடுக்க முற்பட்டது. தஞ்சை மாவட்டம் முழுவதும் 1948 முதல் 1951 வரை 4 ஆண்டுகளுக்கு 144 தடையித்தரவு இருந்தது.

கம்யூனிஸ்ட் கட்சியிம் விவசாயிகள் சங்கமும் அடக்குமுறையை எதிர்த்து பின்றது மட்டுமல்ல. விவசாயிகளின் நலன்களைப் பாதுகாக்கவும் தீண்டாமைக் கொடுமை உள்ளிட்ட பண்ணை அடிமைத்தனத்தை முறியடிக்கவும் முனைப்பாகப் போராடி அதில் வெற்றியிம் கண்டன.

விவசாயிகள், பண்ணையாட்களின் கூலி உயர்வு,  குத்தகை விவசாயிகள் பாதுகாப்பு, மனைப்பட்டா, உபரி பில விபியோகம் போன்ற கோரிக்கைகளுக்காக நீண்ட நெடிய போராட்டத்தை கம்யூனிஸ்ட் இயக்கமும் விவசாய மற்றும் விவசாயத் தொஷீலாளர் இயக்கமும் நடத்தியது. ஊசி முனை அளவு கூட பிலவுடமைதாரர்கள் தவிர மற்றவர்களுக்கு இடமில்லாத பிலையில் மனைப்பட்டாவிற்கான தொடர்ச்சியான போராட்டத்தினை நடத்தி மிராசுதார்களின் பிலங்களில் தலித் மக்களுக்கு மனைப்பட்டா பெற்றுத் தந்தது கம்யூனிஸ்ட் இயக்கம். குத்தகை விவசாயிகளை பாதுகாப்பதற்கு தொடர்ச்சியாக இயக்கம் நடந்து ஒரு பகுதி குத்தகை விவசாயிகள் அவர்கள் சாகுபடி செய்து வந்த பிலங்களை கிரயமாகப் பெற்றார்கள். இதர குத்தகை விவசாயிகள் பில வெளியேற்றத்திலிருந்து தடுக்கப்பட்டு குத்தகை உரிமை பாதுகாக்கப்பட்டது.

தீண்டாமைக் கொடுமைக்கெதிரான, பிலப்பிரபுத்துவச் சுரண்டலுக்கு எதிரான போராட்டத்தை இணைத்து நடத்திய பெருமை கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு உள்ளது. பண்ணையார்களின் உபரி பிலங்களை (பில உச்சவரம்புச் சட்டத்தின் படி) பிலமற்ற விவசாயத் தொஷீலாளர்களுக்கு விபியோகம் செய்ய வேண்டுமென்று கம்யூனிஸ்ட் இயக்கமும் விவசாயிகள் இயக்கமும் நடத்திய போராட்டத்தால் சுமார் 3 லட்சம் ஏக்கர் விபியோகிக்கப்பட்டது. கீழத்தஞ்சையில் பிலத்திற்கான போராட்டம் தனியாக ஆய்வு செய்யப்பட வேண்டிய ஒன்று. இவ்வாறு சாதிக் கொடுமைக்கு எதிராகவும் பிலப்பிரபுத்துவத்திற்கு எதிராகவும் சமரசமற்ற போராட்டத்தை நடத்தியதால்தான் ஒப்பீட்டு அளவில் கீழத்தஞ்சை பகுதிகளில் தீண்டாமைக் கொடுமை ஒஷீக்கப்பட்டுள்ளது.

இத்தகைய போர்க்குணமிக்க கம்யூனிஸ்ட் இயக்கத்தை அஷீக்கும் நோக்கத்தோடு தான் வெண்மதியில் 44 தலித் மக்களை உயிரோடு கொளுத்திய கோரச் சம்பவத்தை மிராசுதாரர்கள் அரங்கேற்றினார்கள். ஆனால், முன்னைக் காட்டிலும் கம்யூனிஸ்ட் இயக்கமும் விவசாய இயக்கமும் விவசாயிகளுக்காக, விவசாயத் தொஷீலாளர்களுக்காக உறுதியாகப் போராடி வருகிறது.

(விரைவில் வெளிவர உள்ள கீழத்தஞ்சை: விவசாயிகள் இயக்கமும், தலித் மக்கள் உரிமைகளும் நூல் முன்னுரையின் சுருக்கிய வடிவம்)

Related posts