You are here

நூலகத்துறையும் நூதனக் கொள்ளையும்!

இது மிகவும் நகைக்கத்தக்க முரண் சான்றாக உள்ளது. இயக்கத் நண்பர் ஒருவர் ஒருவருடம் காணாமல்போனார் அன்னா ஹசாரே உண்ணாவிரத கும்பலில் பத்திரிகை போட்டோவில் தெரிந்தார். ஊழலை ஒழிக்க முடியுமா என்பதன் பரிசோதனை என்றார். கெஜ்ரிவாலின் விளக்குமாறாகி தலைவர்கள் மீது விழும், செருப்பு என இந்தியா முழுதும் என்னென்னவோ ஆகி திரும்பி வந்து சூட்டோட சூடாக இந்த நாட்டில் ஊழலை ஒழிப்பதற்கான 27 அம்ச திட்டங்களுடன் மிக அரிய தகவல் ஏடு ஒன்றைத் தயாரித்தார் அவர்.

புள்ளி விவர புலிகள் கிட்டே நெருங்க முடியாது. ஹாவர்டு பல்கலைக்கழகத்திற்கு தெரிந்தால் (தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தை மன்னித்து விடுவோம்) டபிள் டாக்டரேட் (இரட்டை முனைவர் பட்டம்) தந்திருப்பார்கள். பிரியங்காவின் கணவர் பற்றி தனிபாகமே உள்ளது. லஞ்ச ஊழல் ஒழிப்பில் தரமான புத்தகம். தமிழில் அழகாக அச்சிட்டு பிரபல வெளியிட்டாளர்கள் கொண்டு வந்துள்ள அந்த லஞ்ச-ஊழல் பற்றிய புத்தகத்தைத் தமிழக நூலகத்துறை வாங்க நமது நண்பர் புத்தக விலையில் 25% லஞ்சமாகக் கொடுத்து கை சுட்டுக் கொண்டார்.

இந்த வருடமும் நோ காம்ப்ரமைஸ் என்று அதிகாரிகள் அமைச்சரின் (நேர்முக?) உதவியாளர்கள் இராமேஸ்சுவர சாமிகளை கும்பிட்டார். அதுகூட ஏற்கெனவே கவனித்தவர்களுக்கு மட்டுமே! வழக்கம்போல நமது பதிப்பக நண்பர்கள் கப்சிப். அவரவர்களுக்கு அவரவர் கடை ஓடினால் ஓ.கே. அநேகமாக இப்படியேபோனால் புத்தகம் எழுத – நூலகத்தில் சேர்ப்பிக்க – எழுத்தாள பெருமக்கள் வங்கியில் லோன் வாங்கி லோள்படும் காலம் விரைவில் வரும்.

ஏன் பதிப்பகத்தார்தான் அவதிப்பட வேண்டுமா என்ன? நம்ம லஞ்ச ஊழல் எதிர்ப்பு சூரரின் புத்தகம் நூலகத்திற்குள் இப்படியான நூதன முறையில் நுழைந்துவிட்டது. இன்னும் நாலாயிரம் பணி இடங்கள் நூலகத்துறையில் காலியாக உள்ளன என்று கேள்வி. நூலகத்தில் காலியாக உள்ள அலமாறிகளை நிரப்பவே 25% புரோக் கொள்ளை நடக்கிறது என்றால் காலியாக உள்ள வேலையிடங்களை நிரப்ப என்னவெல்லாம் நடக்குமோ என்று நூலக வட்டாரமே கொலை நடுக்கத்தில் உள்ளது. அடுத்து நமது லஞ்ச ஊழல் எதிர்ப்பு வீர தீர நண்பர் நூலகத்துறையின் இந்த நூதன கொள்ளையை வைத்து ஏராளமான புள்ளி விவரங்களுடன் அடுத்த அரிய நூலை எழுதி இதே பாணியில் எளிதில் நூலகத்திற்குள் நுழைக்கலாம் என்ற முடிவில் இருக்கிறார். படித்து தரமறிந்தா புத்தகத்தை தேர்வு செய்கிறார்கள். தர வேண்டியதை தா. பெற வேண்டிய ஆர்டர் தானே வரும். இந்த இழிவுநிலை தொடர வேண்டுமா. சிந்திப்போம். செயலில் இறங்குவோம்.

ஆசிரியர் குழு

Related posts