You are here
வாங்க அறிவியல் பேசலாம் 

கடவுள் துகள் என்றழைப்பது அபத்தமானது!

பீட்டர் ஹிக்ஸ்

நேர்காணல்: பாப்லோ காரிகாஸ், ஜெஸிகா கிரிக்ஸ் | தமிழில்:  இரா. நடராசன்

Higgs at birthday celebration for Michael Atiyah, April 2009

2013க்கான இயற்பியல் நோபல் பரிசு அறிவிப்பு யாருக்கும் ஆச்சரியம் தரவில்லை. அது பீட்டர் ஹிக்ஸ§க்கு வழங்கப்படும் என்பது பெரும்பான்மை அறிவியலாளர்களின் கருத்தாகவே இருந்தது. அதிலும் கடந்த ஜூலை நான்கு அன்று ஐரோப்பிய அணுக்கருவியல் ஆய்வுமையமான  CERN (ஜெனிவா) ஹிக்ஸ் போசான் அறிவிப்பை வெளியிட்ட பிறகு 1964ல் ஹிக்ஸ் வெளியிட்ட கோட்பாடு நிரூபணமாகி நமது நவீன ஐன்ஸ்டீன் அந்தஸ்தை அது பீட்டர் ஹிக்ஸ§க்கு வழங்கியுள்ளது. கடவுள்துகள் கண்டறியப்பட்டதாக உலகெங்கும் மீடியாக்கள் பெரிய அளவில் பிரஸ்தாபித்தன. கட்டன்பர்க், கலீலியோ,  நியூட்டன், என நீளும் கண்டுபிடிப்பாளர் வரிசையில் கண்டிப்பாக வரலாறு பீட்டர் ஹிக்ஸ்க்கு இடம் கொடுக்கும். அணுவுக்குள் எலெக்ட்ரான் புரோட்டான் நியூட்ரானுக்குள்  என்ன இருக்கிறது? புரோட்டான் எதனால் ஆனது?  எலெக்ட்ரான் இதற்கு துகளியலாளர்கள் (particle physists) அணு உட்கட்டமைப்பின் பொது மாதிரி (Standard model) ஒன்றை 1960களில் வெளியிட்டார்கள். பிரபல இயற்பியலாளர் உல்பாஸ் பாலி உட்துகள்களுக்கு நம் சத்போந்திரநாத் போஸ் நினைவாக போஸான்கள் என பெயரிட்டார். அணுவுக்குள் உட்துகள் மொத்தம் 61. இவற்றில் 12 நுண் துகள்களால்தான் இப்பிரபஞ்சம் ஆனது. இவற்றிற்கு நிறை (னீணீss)  எங்கிருந்து வருகிறது? அணுவில் ஆற்றலை உள்ளடக்கிய உட்துகள் எது? இவற்றை ஆய்வு செய்தது பலர். அதன் வழியே அடைபட்டதுதான் சூப்பர் சிமட்ரி எனும் அதீத சமச்சீர்தளம் மற்றும் ஹிக்ஸ் போஸான் எனும் அணுவுக்கு நிறைய வழங்கும் உட்கருதுகள்! இதைதான்  CERNனின் பிரமாண்ட மின் அணு பாசிட்ரான் மோதி  (Lage Electron position colider) ஏறக்குறைய நிரூபித்துள்ளது.

பீட்டர் வேர்ஹிக்ஸ், 1929ல் ஸ்காட்லாந்தின் நியூகாஸில் மாகாணத்தில் பிறந்தார். ஹிக்ஸ் கல்லூரி (லண்டன்) கல்விக்கு பிறகு 1954ல் முனைவர் பட்டம். பிறகு எடின்பரோ பல்கலைக்கழகத்தில் துகளியல் பேராசிரியராகி ஆய்வுகளைத் தொடர்ந்து வருகிறார். 1964ன் கண்டுபிடிப்பு ஹிக்ஸ் தளம்  (Higgs field) மற்றும் ஹிக்ஸ் போஸான். அணுவின் உட்கரு மாதிரி (model) நிரூபணமானால் அதுவே 21ம் நூற்றாண்டின் மிக அவசியமான திருப்புமுனையை அறிவியலுக்கு வழங்கும். ஹிக்ஸ் போஸானை இவர் மட்டுமே கண்டுபிடிக்கவில்லை. சோவியத் விஞ்ஞானிகள் உட்பட பலரது பங்களிப்புகளை ஹிக்ஸ் இந்த நேர்காணலில் நினைவு கூர்கிறார். இஸ்ரேலின் பாலஸ்தீன ஆக்கிரமிப்பை கடுமையாக சாடுவதிலிருந்து கிரீன் பீஸ் அமைப்புக்கான ஆதரவு வரை பல அரசியல் பங்களிப்புகள் அணு ஆயுதப் பரவலுக்கு எதிரான போராட்டங்களிலும் ஹிக்ஸ் தொடர்ந்து பங்கேற்று பிற இயற்பியலாளர்களுக்கும் ஆதிக்க நிறுவன அறிவியலாளர்களுக்கும் ÔதலைவலிÕ தருபவராக இருப்பதை உரையாடலில் ஈடுபட்ட மெட்டோட் அறிவியல் சமூக இதழியலாளர்களும் குறிப்பிடத் தவறவில்லை. நோபல் அறிவிப்பதற்கு முன் நடந்த உரையாடல் இது. ஐரோப்பிய பாராளுமன்ற சிறப்பு அறிவியல் உரைக்குப் பின் கிடைத்த ஓய்வின்போது ஹிக்ஸ் திறந்த மனதோடு நிகழ்த்திய நீண்ட உரையாடல்.

கே: சர் பட்டம் முதல் நோபல் பரிசு வரை, ஒரே சமயத்தில் அனைத்திற்கும் உங்கள் பெயர் பரிந்துரை செய்யப்படுகிறதே… எப்படி உணர்கிறீர்கள் ஹிக்ஸ்?

பதில்: உண்மையில் இந்த சூழல் சற்று மன உளைச்சலைத் தருகிறது. துகளியலின் ஆகப் பெரிய ஆய்வு இன்னும் முழுமையாக நிறைவு பெறவில்லை. இரண்டாவது இந்த பிரபல்யத்திற்கு சொந்தக்காரன் நான் மட்டுமே அல்ல என்பது. அறிவியல்.. ஆய்வு.. அதன் எழுத்து என்றே வாழ்ந்து விட வேண்டும். எனது கண்டுபிடிப்பை அறிவியல் உலகம் இப்போது புரிந்து கொண்டுள்ளது. நாங்கள் இது ஒரு பத்தாண்டுகளுக்கு முன் நடந்திருக்கக்கூடாதா என்று நினைக்கிறோம்.

கே:ஹிக்ஸ் போஸானை ஒரு வரியில் விளக்க முடிந்திருக்கிறதா… இத்தனை கவனம் பெற்ற பின் அது முக்கியமில்லையா..

ப: அது முடியாத ஒன்றாகவே படுகிறது. 18ம் நூற்றாண்டு விஞ்ஞானிகள் ஒளியை மக்களுக்கு விளக்க முயன்று தோற்றதைப் போலவே உணர்கிறேன். ஹிக்ஸ் போஸான்தான் அணுவிற்கு நிறையை வழங்குகிறது. நிறையை அது எங்கிருந்து பெருகிறது என்பது முக்கியம். 1964ல் நான் வெளிக்கொணர்ந்த கண்டுபிடிப்பு வினோதமான ஒரு ஊடுபொருளை முன் வைக்கிறது. எல்லா புறமிருந்தும் பார்க்க ஒரே மாதிரி கண்ணிற்கு புலப்படும்,  எல்லாபுறமும்  சிதறலமைவைக் கொண்ட தளம் அணுவின் உள்ளே இருந்தாலொழிய குவார்க் குளுவின், போஸான் எதுவுமே சாத்தியமில்லை. 1971ல் குவார்க்குகளும், 1977ல்  ஞீபோஸான், கீபோஸான் என அடுத்தடுத்து நாம் பயணித்திருக்க முடியாது.

கே: இந்த அணு உட்கருவின் துகள் தர மாதிரி  (Standard model) ஒரு கற்பனை என்று முதலில் கூறியவர்கள் இப்போது என்ன சொல்வார்கள்.

ப: நான் இழைகோட்பாட்டுவாதிகளோடான விவாதத்திற்கு என்றைக்குமே தயாராக இருந்தது இல்லை. துகளியல் மற்றும் அலையியல் இரண்டும் வேறானவை எனும் கருத்தியல் பல காலமாக துகளியலைப் புறக்கணித்து விட்டதாகப் பலர் கருதுகிறார்கள். ஐன்ஸ்டீன், பாலி, டைராக் போன்றவர்களின் கனவைத்தான் இப்போது நாம் நிஜத்தில் பார்க்கிறோம். துகளியலின் பிரதான புள்ளி விபர சேகரிப்பு ஆவணம் இன்றி இழைக்கோட்பாடு இல்லை. ஆனால் இழைக்கோட்பாடு பெருங்குழப்பத்தில் முடிந்ததாகப் பலர் கருத்துரைப்பது எனக்கு சரியாக படவில்லை.

கே: ஹிக்ஸ்போஸான் என பெயரிட்டதை ஏற்கிறீர்களா?

ப: காலம்தான் பதில் சொல்ல வேண்டும். ஐன்ஸ்டீன் போஸ் புள்ளியியலின் பங்களிப்பை முன் வைத்து போஸான்களுக்கு பெயர் வைத்த பிறகு நிறைய நடந்துவிட்டது. பிராய்காயிஸ் என்கிலர்ட் மற்றும் ராபர்பிரவுட் இருவரும் மறக்கப்பட முடியாதவர்கள். என்போல தன்னிச்சையாக அதே நிறை தரும் போஸான்களை அடைந்தவர்கள். புரூசல்ஸின் இயற்பியலாளர்களான அவர்களையும் சேர்த்து பிராஸ்காயிஸ், ராபர் ஹிக்ஸ் போஸான் என்று அதை அழைத்தாலும் எனக்கு எந்த ஆட்சேபனையும் இருந்திருக்க முடியாது.

கே: ஆனால் இந்த ஹிக்ஸ் தளம்  (Higgs fiel) மற்றும் ஹிக்ஸ் இயக்கவியல்  (Higgs mechanism)இவை தான் ஹிக்ஸ் போஸான் இயக்கத்தை விளக்குகின்றன. அதையும் சேர்த்து வெளியிட்டது என்பது உங்களை தனித்து நிறுத்துகிறது.

ப: இவைகளைவிட நமக்கு இவை அனைத்துமே இயங்கும் அதீத சமச்சீர் தளநிலை (Super symetry) எவ்வளவு அவசியம் என்பதை நாம் ஏற்க வேண்டும். இந்த சூப்பர்சிமட்ரியை நாம் இழைக்கோட் பாட்டிடமிருந்து  (String Theory) தான் பெற்றோம். அதிலும் சோவியத் இழைக்கோட்பாட்டாளர்கள் யெவ்கெனி லிக்த்மன் மற்றும் டிமிட்ரி வோல்காவ் இன்றி சூப்பர் சிமட்ரி (கண்டுபிடிப்பு) நமக்கு கிடைத்திருக்காது. இன்று ஹிக்ஸ்போஸான் இருப்பது  உண்மையானால் சூப்பர் சிமட்ரி நிலை அணு உட்கருக்குள் அமைந்துள்ளதும் உண்மைதான்.

கே: கடவுள்துகள் என்று அதற்கு பெயரிட்டது ஒரு திருப்புமுனை என்கிறார்களே.

ப: அது ஒரு ஜோக். அதற்கும் எனக்கும் சம்பந்தம் கிடையாது. Ôகடவுள்துகள்Õ என்றழைப்பது அதற்கு ஒரு அந்தஸ்த்தை கொடுப்பதாக விஞ்ஞானிகளே கருதுவது அதைவிட பெரிய ஜோக். ஆனால் அப்படி அழைப்பது அபத்தம். மதவாதிகளுக்கு கடவுள் என்பது முக்கியம். எனவே கடவுள்துகள் கண்டுபிடிப்பும் அதே அளவு முக்கியம் என்பதுபோல வெகுஜன ஊடகங்கள் வழி ஒரு மாய பரபரப்பு ஏற்படுத்துவதில் எந்த அறிவியல் வாதிக்கும் உடந்தை இருக்க முடியாது. இருபத்தோறாம் நூற்றாண்டிலும் கூட இப்படி ஒரு அபத்தம் நிகழ முடியும் என்பது அளவற்ற எரிச்சல் தரும் விஷயமாக உள்ளது. ஒரு புத்தக விற்பனைக்காக வைத்த பெயரை அவர்கள்தான் விளக்க வேண்டும்.  அறிவியல் என்பதும் கண்டுபிடிப்பு… நமது புரிதல் மீதான திருப்புமுனை கோட்பாடு விஞ்ஞானத்தின் தெளிவான தன் விளக்க இயல்பு என்பதும் அனைத்துமே இந்த பெயரிடலின் மூலம் அவமானப்படுத்தப் படுவதாகவே நான் கருதுகிறேன்.

கே: தங்களுக்கு தெரிந்த மதத்தின் வாழ்க்கை தொடர்பின் மூலம் சாதாரண மக்கள் அறிவியல் கண்டுபிடிப்பை அணுகுவதை நீங்கள் ஏற்கவில்லையா.

ப: மதத்தையே அறிவியல் முறைப்படி அணுக சமூகத்தை பதப்படுத்தாத அறிவியல் சித்தாந்தம் அறிவியலே அல்ல என்று சிந்தித்து செயலாற்றிய மரபில் வந்தவன்நான்.

கே: இஸ்ரேலின் பாலஸ்தின கொள்கையை கடுமையாக சாடுவது கிரின்பீஸ் அமைப்போடு இணைவது.. இப்போது Ôகடவுள்துகள்Õ பெயர் சூட்டலை திறந்த மனதோடு எதிர்ப்பது.. உங்களது அறிவியல் உலகை கடந்த விஷயங்களாக உள்ளதே.

ப: புவியின் அனைத்து வகை அரசியல் பிரச்சனைகளோடும் நாம் ஏன் தொடர்பு கொண்டு கருத்துரைக்க கூடாது. அறிவியல் என்பது ஒரு கூடாரமல்ல. அணு ஆயுதப் பரவலை எதிர்த்து கூட்டமைப்போடு இணைந்து பல வருடங்கள் நான் போராடியுள்ளேன். புவி பாதுகாப்பும் குறிப்பாக இயற்கை வளங்களைப் பேரழிவுக்கு உட்படுத்தும் சுயலாப அரசியலையும் எதிர்த்துப் போராட கிரீன்பீஸ§டன் இணைந்தேன். சமூகவியலாளனாக இல்லாத ஒரு அறிவியல்வாதியைக் காட்டுங்கள்.

கே: பிறகு ஏன் கிரீன் பீஸ் அமைப்பிடமிருந்து விலகினீர்கள்?

ப: மனித ஊனத்தைப் போக்கும் மரபியல் மாற்றுவழி உடலுறுப்பு உற்பத்தியை அவர்கள் எதிர்க்கிறார்கள். எனக்கு அதில் உடன்பாடில்லை. விலகினேன். அறிவியலின் அனைத்து அம்சங்களும்  வெகுஜன மக்களது பயன்பாடாக மாற வேண்டும். அதுதான் எனது குறிக்கோள். அதற்கும் அறிவியலைப் பயன்படுத்தி அரசியல் மேற்கொள்ளும் அழிவுகளைத் தடுக்கவும் இயக்கங்கள் கண்டிப்பாக தேவை.

கே: CERNனில் நடந்தது என்ன? ஜூலை4 அன்று ஜனிவாவில் பாபியோலா கியாடியும் ஜோ கொண் மொவும் அந்த பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தியபோது எங்கிருந்தீர்கள். எப்படி உணர்ந்தீர்கள்?

ப: மற்றவர்களைப் போலவே நானும் பெரும் எதிர்பார்ப்போடு இருந்தேன். துகளியலின் பெரிய சிக்கலைத் தீர்த்து வைக்க பல ஆண்டுகளாக ஏராளமான பட்ஜெட்டில் மாபெரும் ஹாட்ரான் மோதி  (Large Hydran Collider) மேற்பரப்பிலிருந்து 100 மீட்டர் கீழே வட்ட வடிவில் 27 கிலோ மீட்டர் சுற்றளவான வட்டத்தில் 2000 டன் எடை ஆய்வுப் பொருட்களுடன் 5000 சக்தி வாய்ந்த காந்தங்களால் – அதை வடிவமைக்கவே 1999 தொடங்கி 2008 வரை கிட்டத்தட்ட பத்தாண்டு பிடித்தது. 7347 கண்காணிப்பு நுண்ணோக்கிகள் வழியே  8000  சக  இயற்பியலாளர்களால் துகள்மோதல் ஆய்வு செய்யப்பட்டது எனும்போது உலகில் இதுவரை நடந்த ஆய்வுகளிலேயே பெரியது எனும் மனநிலையே எனக்கு ஹஸ்காநிலையை பல நாட்கள் கொடுத்தது. எனது புரிதல் தவறு என்று அவர்கள் அறிவித்திருந்தால் கவலையும் துயரமும் சூழ்ந்திருக்கும்.. பின் எனக்குப் புரிந்ததை வேறு எப்படி மாற்றிப் புரிந்து கொள்வதெனத் தெரியாமல் போயிருக்கும். நான் அன்று சிசிலியில் கோடைகால இயற்பியல் பள்ளியில் குழந்தைகளுடன் விவாதத்தில் இருந்தேன். எனது பயண காப்பீடு அன்றோடு முடிந்ததால் ஷென்பரோ செல்லுமாறு நிர்பந்திக்கப்பட்டேன். பிறகு  CERN கோட்பாட்டாளர் ஜான் எலிஸ் டோனில் அழைத்தார். நேராக DERN வாருங்கள்.. வரவில்லையேல் அதற்காக பிறகு வருந்துவீர்கள். 1919ல் ஐன்ஸ்டீன் எப்படி உணர்ந்திருப்பார் என்பதை இப்போது புரிந்து கொள்ளமுடிகிறது.

கே: எதிர்காலம்.. ஹிக்ஸ்போஸானுக்கு பிறகு?

ப: இப்போது சூப்பர் சிமட்ரி இருப்பது நிரூபணமாகிவிட்டது. பிரபஞ்சத்தின் கருப்பொருள் (dark malter) குறித்த ஒரே மாதிரி சூப்பர் சிமட்ரிதான். இனி அணுக்கருவியலை பிரபஞ்ச இயலோடு இணைப்பது அத்தனை கடினமல்ல.

நன்றி- மெட்டோட் இணைய அறிவியல் இதழ்..

Related posts

Leave a Comment