நூல் அறிமுகம் 

இயற்கையின் அற்புத உலகில் கமலாலயன்

மலையாள இலக்கிய உலகில் குழந்தைகளுக்காக அற்புதமான படைப்புகளை உருவாக்கி வழங்கும் படைப்பாளி பேரா.எஸ்.சிவதாஸ். ஏற்கெனவே இவருடைய ‘மாத்தன் மண்புழு வழக்கு’, புக்ஸ் ஃபார் சில்ட்ரன் வெளியீடாக தமிழில் வந்துள்ளது. குட்டிப்பாப்பா ஒருத்தி, தன்னையும், தன் வீட்டையும் சுற்றிலும் உள்ள இயற்கையின் அற்புதங்களையும் பார்த்து வியந்து போகிறாள். ஒவ்வொன்றையும் ஆராய்ந்து பார்த்து, காரண காரியத் தொடர்புகளைக் கண்டுபிடிக்கிறாள். கறுப்போ, வெளுப்போ மனிதர்களின் உடல் நிறம் எதுவாயிருப்பினும் அவர்களின் சிரிப்பு வெள்ளைதானே என்பது பாப்பாவின் முதல் கண்டுபிடிப்பு. புதிய ஓர் உண்மையைக் கண்டுபிடிப்பதில் பொங்குகிறது மகிழ்ச்சி. பால் வடியும் முல்லை மொட்டுச் சிரிப்புடன் முற்றத்தில் இறங்குகிறாள் குட்டிப் பாப்பா. முல்லைக் கொடிகள் சிரிக்கும் முற்றத்திற்குப் போகிற பாப்பா, பறக்கும் வண்ணத்துப் பூச்சியைக் கண்டு பின் தொடர்ந்து போகிறாள். வண்ணத்துப் பூச்சியின் முட்டையைக் கண்டுபிடித்து அதன் தவம் எதற்காக என அறிகிறாள்….

Read More
நூல் அறிமுகம் 

எலக்ட்ரா இரா. தெ. முத்து

மொழிபெயர்ப்பு,கவிதை,புனைவு என்று இயங்கி வரும் ரேவதி முகிலின் முதல் கவிதைத் தொகுப்பு எலக்ட்ரா. கிரேக்கத் தொன்மத்தில் இடம் பெற்ற தந்தைமை மீதான ஈர்ப்பு , எலக்ட்ரா எனும் பெண் பெயரால் எலக்ட்ரா காம்ப்ளெக்ஸ் என்று அறியப்படுகிறது.தொகுப்பு முழுவதும் மீசை முளைத்த தாய்மை வேண்டியும், ஆண் மைய உறவின் துரோகம் குறித்தும் காட்சிப்படுத்தப்படுகிறது.அந்தியில் பூக்கும் காமத்தையும் , அடங்காப் பெரும்பசியில் ஆழ்துயில் முறித்த , விரிகூந்தலோடான யட்சியின் வாழ்வில் வந்து ஒலிக்கும் , யட்சனின் பாடல்களைப் பாடும் பொழுதும் , கவிதையின் மொழி அடர்ந்த தேக்கங்காடுகளின் ஊடாகப் பயணிக்கும் கிறக்கத்தைத் தருகிறது. சங்ககாலத்தின் நீட்சியாக இவ்வகைக் கவிதைகளில் மொழி வந்தமர்ந்து தேரோட்டம் நடத்திக் கொண்டிருக்கிறது. துரோகத்தையும் கயமையையும் பாடும் இடங்களில் , ஏகத்துக்கும் முறுக்கிக் கொண்ட மான்கொம்பு போலவும் , நடுரோட்டில் குடல் சிதறிப் பல்லிளித்துப் பரப்பிக் கிடக்கும்…

Read More
புரட்சி இலக்கியங்கள்: ஒரு மீள்வாசிப்பு 

ஊடகங்களும் மாறுவேட முதலாளித்துவமும்

என். குணசேகரன். கடந்த கால் நூற்றாண்டில், ஊடகத் துறையின் வளர்ச்சி பிரமிக்கத் தக்கது. அச்சு ஊடகம், காட்சி ஊடகம், இரண்டும் பெரும் மாற்றங்களை கண்டுள்ளன. அவற்றோடு இணையான வளர்ச்சி பெற்றதாக சமூக ஊடகங்கள் திகழ்கின்றன. இந்த மாற்றங்களும், வளர்ச்சியும் மார்க்சிய இயக்கங்களுக்கு பெரும் சவால்களைத் தோற்றுவித்துள்ளன. ஊடகங்களில் மார்க்சியங்களின் செயல்பாடு குறித்த பழைய அணுகுமுறைகள், கருத்தாக்கங்கள் அனைத்தையும் புதுப்பிக்க வேண்டிய அவசியம் உள்ளது. பொருந்தாத சில கண்ணோட்டங்களைக் கைவிடுவதும் அவசியமாகிறது. இது குறித்து, மார்க்சியர்கள் மத்தியில் தொடர்ந்து விவாதம் நடைபெற்று வருகிறது. பேராசிரியை ஜோடி டீன் (Jodi Dean) எழுதிய ‘‘ஜனநாயகம் உள்ளிட்ட நவீன தாராளமய புனைவுகள்” (Democrasy and other Neoliberal Fantasies) என்ற நூல் முக்கியமானது. சமூக ஊடகங்கள் உள்ளிட்ட ஊடகங்களைக் கையாள்வதில் இடது சாரிகளின் செயல்பாடுகள் பற்றிய மிக கூர்மையான விமர்சனங்களை டீன்…

Read More
அஞ்சலி 

தோழர் சுந்தா அஞ்சலி

‘சுந்தா’ என்கிற சுந்தரம், காஞ்சீபுரம் மாவட்டத்தில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் – கலைஞர்கள் சங்கத்தின் நிறுவனர்களுள் ஒருவர். வங்கி ஊழியராகப் பணியாற்றி வந்தாலும் அவருடைய உள்ளார்ந்த ஈடுபாடு முற்போக்கு இலக்கியச் செயற்பாடுகளின் மீதே இருந்தது. தமுஎகச-வின் மாநில நிர்வாகிகளுள் ஒருவராக இறுதிவரை சுந்தா ஆற்றி வந்த பணிகள் அளப்பரியவை. அவருக்கு புத்தகம் பேசுதுவின் சிரம் தாழ்ந்த அஞ்சலி.

Read More
நூல் அறிமுகம் 

நாமும், நம்மைப் போன்ற விலங்குகளும் அ.வெண்ணிலா

ஜானகி லெனின் அவர்களின் ‘எனது கணவனும் ஏனைய விலங்குகளும்’ என்ற அனுபவப் பகிர்வுகளின் தொகுப்பு நூல், தலைப்பின்மூலமே முதலில் கவனத்தைக் கவர்கிறது. தலைப்பைக் கேள்விப்படும் பெண்கள் முகத்தில் லேசான சிரிப்பும் ஆச்சர்யமும், ஆண்கள் முகத்தில் கேள்விக்குறியுடன் கூடிய திகைப்பும், கோபமும். தி இந்து ஆங்கில நாளிதழில் அவர் எழுதிய பத்திதான் இந்நூல். இந்நூலை அவருடைய தந்தை கே.ஆர்.லெனின் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். அதனாலேயே மொழிபெயர்ப்பு நூலுக்கு நேரும் பல விபத்துக்கள் இந்நூலில் தடுக்கப்பட்டிருக்கின்றன. இயல்பான எளிமையான மொழிநடையினால் வாசகரை உள்ளிழுக்கிறது. மூன்று பக்கங்களுக்குள் அடங்கிவிடும் கட்டுரைகள். எழுத வந்த விஷயத்திற்குத் தொடர்பில்லாத ஒரு வரியும் இல்லாத அளவில் நேரடியாகச் சொல்லப்பட்ட மொழி. திரைத்துறையினருக்குத் தேவையான எடிட்டிங் கற்பதுபோல், ஜானகி, எழுத்திற்கான எடிட்டிங் பயிற்சியும் பெற்றுள்ளதாகக் குறிப்பிடுகிறார். அவ்வனுபவம் எழுத்தில் தெரிகிறது. ஆங்காங்கே மெல்லிய நகைச்சுவை. சமூக விமர்சனங்கள். ஜானகி…

Read More
நூல் அறிமுகம் 

பெத்தவன் நெடுங்கதை – பாரதி புத்தகாலயம்

பெத்தவன் நெடுங்கதை – பாரதி புத்தகாலயம் பெத்தவன் – என்ற இந்தக் கதை சாதிய கட்டப் பஞ்சாயத்து வன்முறையாளர்களால், தான் பெற்ற மகளையே விஷம் வைத்துக் கொல்லத்தூண்டப்படும் ஒரு தந்தையின் மனப் போராட்டங்களை தெள்ளத் தெளிவாகப் படிப்பவர்கள் புரிந்துகொள்ளும் வகையில் அப்பகுதி மக்களின் வட்டார மொழிநடையிலேயே எழுதப்பட்டுள்ளது. இதன் ஆசிரியர் இமையம் அவர்கள் இக்கதையை மிகவும் யதார்த்தமாக எழுதியுள்ளார். ”ஜாதிகள் இல்லையடி பாப்பா குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்” – என்ற புரட்சிக் கவிஞர் பாரதியின் பாடல் மூலம், ஜாதி வேறுபாடு, பிரிவினைகளை பிள்ளைப் பருவத்திலேயே களைந்தெறிய வேண்டும் என்று பள்ளிகளில் கற்பிக்கப்பட்டாலும், ஜாதி (தீ) யின் வேர்களை எவராலும் கண்டுபிடிக்க முடியவில்லை. அவை நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டேதான் இருக்கின்றன. சாதீய வன்முறையாளர்களால் வளர்க்கப்பட்டும் வருகின்றன. தான் பெற்ற மகள் வேறு சாதிப் பையனைக்…

Read More
நிகழ்வு 

சாதியொழிப்புக் களத்தில் ஓர் இலக்கிய ஆயுதம் ம. மணிமாறன்

குளிர்காற்று ஊர்ந்து பரவி தோழர்களோடு தோழராக அமர்ந்தபோது விழாவிற்கேயான உற்சாக மனநிலை உருவானது. ப்ரதிபா ஜெயச்சந்திரன் எழுதிய ‘கரசேவை’ சிறுகதைத் தொகுப்பு வெளியீட்டு விழா அது. தமுஎகச மாவட்டத் தலைவர் தேனி வசந்தன் தலைமையேற்றார். தீண்டாமை ஒழிப்பு முன்னணி தலைவர் முத்துக்குமார் வரவேற்றார். நிகழ்வுகளை லட்சுமி காந்தன் ஒருங்கிணைத்தார்.”என்னோடு தெருப்புழுதிக்குள் உழன்ற மனிதனைத் தேடியபோது நான் ப்ரதிபா ஜெயச்சந்திரன் எனும் கதைக்காரனைக் கண்டடைந்தேன்,” என்று தன்னுடைய ஆய்வுரையைத் துவக்கினார் பொ. வேல்ச்சாமி. எல்லாக் கதைகளுக்குள்ளும் புரளும் மொழி, பைபிளின் சாரத்திலிருந்து எழுத்தாளன் கண்டறிந்தது என மொழியழகின் வழியே நிறுவினார். அவரது உரை மொழியென்றால் என்ன, நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கும் கதை மொழி எவருடையது, தலித் இலக்கியம் என நாம் நம்பிக் கொண்டிருக்கும் பிரதிகளுக்குள் புரளும் மொழி நிஜத்தில் நம்முடையதுதானா என்ற கேள்விகளைத் தொட்டது. “கதை கிறிஸ்துவ குருத்துவம்…

Read More

பாரதி புத்தகாலயத்தின் நூல்கள் அறிமுகம்

‘‘புற்று நோய்ப் படுக்கையில் சிரிப்பு’’ | இன்னசென்ட் | தமிழில்:மு.ந.புகழேந்தி| பாரதி புத்தகாலயம் | விலை.50 | பக். 64 மலையாளத் திரைப்பட நடிகர்களுள் ஒருவரும், திரைத்துறை சங்கமான ‘அம்மா’வில் முக்கியப் பொறுப்பு வகித்துள்ளவருமான இன்னசென்ட், சாலக்குடி மக்களவைத் தொகுதியின் மார்க்சிஸ்ட் கட்சி நாடாளுமன்ற உறுப்பினராகவும் 2014ஆம் ஆண்டிலிருந்து பொறுப்பு வகிக்கிறார். ‘மனிதர்களைச் சிரிக்க வைத்து பிழைத்துக் கொண்டுள்ள தனக்கும், கண்ணீர் மற்றும் துக்கத்தினுடைய உலகமான புற்றுநோய்க்கும் எப்படி ஒத்துப் போகும்?’ என்பது இவரது கேள்வி. புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, மீண்டு வந்து, நாடாளுமன்றத்தில் தனது சொந்த அனுபவத்தில் சந்தித்த பிரச்சனைகளின் அடிப்படையில் பொதுமக்களுக்கு அரசு மருத்துவமனைகள் ஆற்ற வேண்டிய பணிகளை வலியுறுத்தி உரையாற்றியவர். ”ஆறு மாதங்களுக்கு முன்பு திரும்பவும் நான் நடிக்க வருவேன் என்று யாரால் உறுதியாகச் சொல்ல முடிந்திருந்தது? வாழ்க்கை திரும்பி வருகின்றது. நான் பழைய…

Read More
அஞ்சலி 

அலிகர் பல்கலைக் கழக ‘நவீன இந்திய மொழிகள்’ துறைத் தலைவர் பேராசிரியர் மூர்த்தி மறைவு

சமுதாயத்தின் துயரம், காவியங்களில் ஒலிக்கலாம். அத்துயர ஒலி, எதிர்காலத்தின் விடிவுக்கு அழைப்பு மணியாக இருக்க வேண்டுமேயொழிய துயரத்தையே நியாயப்படுத்துவதாக இருக்கக்கூடாது. கவிஞர்கள், தனிமனித வாழ்வின் துயரங்கள் பெரும்பாலும் சமுதாயத்தின் பொதுவான அமைப்பு முறைகளால்தான் ஏற்படுகின்றன என்பதை உணர வேண்டும். இல்லையெனில் தன் துயரத்தைப் பற்றியே பெரிதுபடுத்திப் பாடிக் கொண்டிருக்கும் கையறு நிலைக் கவிஞர்களாகி விடுவர். மனித குலச் சிந்தனை வரலாற்றில் புதிய திருப்பத்தை, புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்தத்துடித்த ஒவ்வொரு சிந்தனையாளனுக்கும், செயல் வீரனுக்கும், கவிஞனுக்கும் காலம் முதன் முதலில் அளித்த பட்டம், ‘பைத்தியக்காரன்’ என்பதே ஆகும். தனிமனித நலன்களைச் சமுதாய நியாயங்களாக்கச் சிலர் துடித்தபோது, சமுதாயச் சிந்தனைக் கொதிப்பில் அறிஞர்களும் கவிஞர்களும் தோன்றினார்கள். தோன்றுவார்கள். அவர்களின் நெருப்புப் பார்வையில் நெருஞ்சிக் கொடுமைகள் பொசுங்கிப் போகும். கால ஓட்டத்தில் அந்த அறிஞர்கள் மறையலாம். அவர்கள் மூளையோடு மட்டுமே தொடர்பு…

Read More
நூல் அறிமுகம் 

சிறகு விரிக்கும் வாழ்வு: பெண்ணின் புரட்சி பாரதி செல்வா

அப்துல்லா ஒசலான் என்பவர் குர்து இனக் குழுப் போராளிகளின் தலைவர். 1949 ஆண்டு பிறந்துள்ளார் பலமுறை அவர் கொரில்லாப் போரைத் தன்னிச்சையாக நடத்தி குர்து இன விடுதலைக்காக அரசியல் ரீதியாக தீர்வு காண வேண்டும் என்று துருக்கி அரசுக்கு வேண்டுகோள் விடுத்தார். அதனை ஏற்று 2009 அமைதி நடவடிக்கையை முன்னெடுத்தது. கடந்த 2011ல் அவர் மீண்டும் இம்ராலி தீவுச் சிறையில் தனிமையில் அடைக்கப்பட்டார். அங்கு பல நூல்களை அவர் எழுதி பெண் விடுதலையே சமூக விடுதலையை சாத்தியப்படுத்தும் என்ற கருத்தை வலுவாக முன்வைக்கிறார். பெண்ணின் புரட்சி என்ற இந்த சிறு கட்டுரைத் தொகுப்பு International initiative என்ற அமைப்பால் உருவாக்கப்பட்ட மூன்றாவது நூல். ஓசலானின் பல நூல்களிலிருந்து எடுக்கப்பட்ட கருத்துகள் சிறு நூலாகத் தொடுக்கப்பட்டுள்ளன. 1999ஆம் ஆண்டு கடத்தப்பட்டு சிறைவைக்கப்பட்டார். பால் மற்றும் பாலினம் குறித்து அவர்…

Read More